ஸ்பெயின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நால்வர்

மட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் சென்ற வாரம் 13 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான இஸ்லாமிய குழு ஒன்றைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் கூறின. அந்த நால்வரும் பார்சி லோனா நகரிலிருந்து மாட்ரிட் நகருக்கு கொண்டுவரப்பட்ட தாகவும் பின்னர் பலத்த பாது காப்புடன் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல் லப்பட்டதாகவும் போலிசார் கூறினர். பார்சிலோனா நகரில் கூட்டத்தினர் மீது வேனை மோதி பலரைக் கொன்று குவித்த வன் என்று அடையாளம் காணப்பட்ட யூனுஸ் அபுயாக்கூப் என்ற 22 வயது இளைஞனை ஸ்பெயின் நாட்டுப் போலிசார் திங்கட்கிழமை சுட்டுக் கொன் றனர். பார்சிலோனா தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடிய அபுயாக்கூப், கார் ஓட்டுநர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அந்தக் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றான். பார்சிலோனாவுக்கு அருகே உள்ள ஒரு நகரில் அவன் பதுங்கியிருந்ததாகவும் இரவு நேரத்தில் மட்டும் அவன் வெளியில் வந்ததாகவும் புலன் விசாரணையாளர்கள் கூறியதாக ஸ்பானிய நாளேடு ஒன்று தெரிவித்தது. பார்சிலோனா தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் பரவி வரும் புதர்த் தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: இபிஏ

13 Nov 2019

மோசமாகிவரும் ஆஸ்திரேலிய புதர்த் தீ; சிட்னியிலும் பாதிப்பு

கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் நடைபெற்ற கடல்நாகப் படகுப் போட்டி. படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

கம்போடியாவில் கடல்நாகப் படகுப் போட்டி