‘ஆப்கானுக்கு இந்தியாவின் உதவி தேவை’

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் உடனடியாக மீட்டுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் தலிபான் போராளிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெறும் வரை அவர்கள் தொடர்ந்து அங்கு இருப்பார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது தேர்தல் பிரசார சமயத் தில் திரு டிரம்ப் கொடுத்த வாக்குறுதியிலிருந்து வேறுபட்ட தாகும். ஈராக்கில் அமெரிக்கா செய்த தவற்றை தவிர்ப்பதற்காக திரு டிரம்ப், ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அவரது நிலையை மாற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக்கு கூடுதலாக அமெரிக்க வீரர்களை அனுப்ப இருப்பதாகவும் திரு டிரம்ப் கூறியுள்ளார். வா‌ஷிங்டனில் உள்ள ஒரு ராணுவத் தளத்தில் திரு டிரம்ப் ஆற்றிய தொலைக் காட்சி உரையில் இவ்வாறு கூறினார்.

ஆப்கானிஸ்தானின் நிலைத்தன்மைக்கு இந்தியா ஆற்றி வரும் முக்கிய பங்கினை அமெரிக்கா பாராட்டுவதாகவும் திரு டிரம்ப் தெரிவித்தார். ஆப்கானில் அமெரிக்கா மேற் கொள்ளும் வளர்ச்சி திட்டங் களில் இந்தியாவும் கூட்டு சேர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய திரு டிரம்ப், பொருளியல் ரீதியில் ஆப்கான் நாட்டை உயர்த்த இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானை பாராட்டிய அதே வேளையில் பாகிஸ்தானை திரு டிரம்ப் கடுமையாகச் சாடியுள் ளார். பாகிஸ்தானில் பயங்கர வாதத்தை ஒடுக்க அந்நாட்டுக்கு பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா நிதி உதவி அளித்து வரும் வேளையில் பயங்கரவாதி களின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் சொன்னார். பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று திரு டிரம்ப் வலியுறுத்தினார். இந்நிலையில் ஆப்கானில் உள்ள தலிபான் குழுவின் பேச்சாளர் ஸபியுல்லா முஜாஹிட், “ஆப்கானிலிருந்து அமெரிக்க வீரர்களை அமெரிக்கா மீட்டுக் கொள்ளவில்லை என்றால் விரைவில் அமெரிக்காவுக்கான கல்லறைப் பகுதியாக ஆப்கான் மாறும்,”என்று எச்சரித்துள்ளார்.