செப்டம்பர் 1ல் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்

சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் செப்டம்பர் 1ஆம் தேதி கொண் டாடப்படும். இதனை சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் முஹமது ஃபட்ரிஸ் பக்காரம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். மெக்காவுக்கான புனித ஹஜ் பயணத்தின் நிறைவைக் குறிக் கும் வகையில் ஹஜ்ஜுப் பெரு நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு உலகம் முழு வதும் சுமார் இரண்டு மில்லியன் பேர் புனித மெக்கா பயணத்தை மேற்கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் போது ‘குர்பான்’ சடங்கை நிறை வேற்றி ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுவது வழக்கம். சிங்கப்பூரில் மட்டும் இவ் வாண்டு 25 பள்ளிவாசல்களில் நடைபெறும் குர்பான் சடங்குக் காக சுமார் 3,700 ஆஸ்திரேலிய ஆடுகள் தருவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து ஆடு களையும் பொதுமக்கள் ஏற் கெனவே வாங்கிவிட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon