உதவ வந்த அதிகாரி விபத்தில் காயம்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், அவசர மருத்துவ உதவி வழங்குவதற்காக தீ அணைக்கும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் நிகழ்ந்த விபத் தில் அவரது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. செம்பவாங் ரோடு, ஜாலான் ஜெருஜு சந்திப்பில் செம்பவாங் ரோட்டிலிருந்து கேன்பரா ரோட்டுக் குள் நுழைந்த கார், அப்பர் தாம் சன் சாலையை நோக்கி செம்பவாங் ரோடு வழியாகச் சென்ற அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அதிகாரியின் வலது கால் முட்டியில் காயம் ஏற் பட்டதாகக் கூறப்படுகிறது. கூ டெக் புவாட் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர் வீடு திரும்பிவிட்டார் என்று நம்பப்படுகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்து அங்கு சென்ற போலி சார், சுயநினைவுடன் இருந்த அந்த அதிகாரியை மருத்துவ மனையில் சேர்த்தனர். கார் ஓட்டுநரின் விவரம் தெரிய வில்லை. இந்தச் சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

சுயநினைவுடன் இருந்த அதிகாரியை போலிசார் மருத்துவமனையில் சேர்த்தனர். படம்: லியான்ஹ வான்பாவ்