படகோட்டம்: சிங்கப்பூருக்கு தங்கப் பதக்கம்

இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் படகோட்டப் போட்டிகளில் சிங்கப்பூர் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான ‘லேசர் ஸ்டேண்டர்ட்’ போட்டியில் ரயன் லோ, மார்க் வோங், பெர்னி சின் ஆகிய மூவர் கொண்ட குழு போட்டியை ஏற்று நடத்தும் மலேசியாவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. மகளிருக்கான ‘லேசர் ரெடையல்’ போட்டியில் சிங்கப்பூர் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இறுதிச் சுற்றில் அக்குழு தாய்லாந்திடம் தோற்றது. சிங்கப்பூரின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான படகோட்டக் குழு வெண்கலப் பதக்கத்தை வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அக்குழு மியன்மாரைத் தோற்கடித்தது.