சுடச் சுடச் செய்திகள்

தியேன்வையின் நீண்டநாள் தங்கக் கனவு நிறைவேறியது

தென்கிழக்காசிய விளையாட்டு களின் மகளிருக்கான ஒற்றையர் மேசைப்பந்துப் போட்டியில் சிங்கப்பூரின் ஃபெங் தியேன்வை தங்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் சக வீராங் கனையான சோ யிஹானை 9-11, 11-6, 7-11, 11-9, 12-10, 13-11 எனும் செட் கணக்கில் தோற் கடித்தார். இதற்கு முன்னதாக அரை இறுதியில் அவருக்கும் நடப்பு வெற்றியாளராக இருந்த தாய்லாந் தின் சுதாசினி சவேத்தாபுட்டுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அந்த ஆட்டத்தில் விட்டுக்கொடுக்காமல் விளை யாடிய தியேன்வை வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றார்.

இந்நிலையில், நேற்றைய இறுதிப்போட்டியில் இரண்டு செட்டுகளை இழந்தும் துவண்டு விடாமல் விளையாடிய தியேன்வை இறுதியில் வெற்றியைச் சுவைத் தார். இது தென்கிழக்காசிய விளையாட்டுகளின் மகளிர் ஒற்றையர் மேசைப்பந்துப் போட்டி யில் தியேன்வை வென்றிருக்கும் மூன்றாவது தங்கப் பதக்கமாகும். அவர் 2009ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் தங்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து, மூன்றாவது தங்கத்தை வெல்ல அவர் ஆறு ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில் அவர் தகுதிச் சுற்றிலேயே வெளி யேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்கம் வெல்லும் அவாவுடன் இருந்ததாகவும் அதைப் பெற தமக்குத் தாமே பல சவால்களை விடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

தியேன்வை (வலது). படம்: சாவ்பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon