சுடச் சுடச் செய்திகள்

தங்க மகள் ரொயன் ஹோ

மகளிருக்கான 50 மீட்டர் நெஞ்சு நீச்சலில் சிங்கப்பூரின் ரொயன் ஹோ தங்கப் பதக்கத்தைத் தக்க வைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இதே போட்டி யில் அவர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரின் மற்றொரு வீராங் கனையான சமந்தா இயோ மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நுரையீரல் குறைபாடு ஹோவுக்கு ஏற்பட்டு இருந்தது. அதனுடன் போராடி உயிர் பிழைத்த ஹோ இவ்வாண்டுக்கான போட்டிக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்து மீண்டும் தங்கம் வெல்லும் தமது கனவை நனவாக்கியுள்ளார். “தங்கம் வெல்வது சாத்திய மில்லை என்று நினைத்தேன். இலட்சியத்தை விட்டு விடலாம் என்று கூடத் தோன்றியது. ஆனால் எனக்கு எனது குழுவினர் பேராதரவு வழங்கினர். அவர்களது ஆதரவு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்றார் ஹோ. ஆண்களுக்கான 200 மீட்டர் நெஞ்சு நீச்சலில் சிங்கப்பூரின் லயனல் கூ நான்காவது இடத்தில் போட்டியை முடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். வெண்கலப் பதக்கத்தை அவர் மலேசியாவின் டேனியல் லிம்மிடம் நூலிழையில் இழந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon