பர்வீன் சுல்தானாவுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் வந்துள்ள பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு சையது ஆல்வி சாலையிலுள்ள ஆனந்த பவன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் நடைபெறும். தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் சங்கம், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆகிய ஒன்பது அமைப்புகள் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. மிகச் சிறந்த பேச்சாளரும் சிந்தனையாளருமான பேராசிரியை பர்வீன் சுல்தானா பலமுறை சிங்கப்பூருக்கு வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது. பலமொழிப் புலமையுடைய அவருடன் கலந்துரையாடி பயன் பெற தமிழன்பர்கள் அனைவரையும் ஒன்பது அமைப்புகளும் அன்புடன் அழைக்கின்றன. நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

பேராசிரியை பர்வீன் சுல்தானா. படம்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon