சுடச் சுடச் செய்திகள்

சிட்டியைக் காப்பாற்றிய ஸ்டெர்லிங்கின் கோல்

மான்செஸ்டர்: எவர்ட்டனுக்கு எதிராக ரஹீம் ஸ்டெர்லிங் போட்ட கோல் மான்செஸ்டர் சிட்டியைத் தோல்வியின் பிடியிலிருந்து காப் பாற்றியுள்ளது. நேற்று முன்தினம் சிட்டிக்கும் எவர்ட்டனுக்கும் இடையிலான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பான முறையில் நடைபெற்றது. இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. ஆட்டத்தின் 35வது நிமிடத் தில் எவர்ட்டனின் வெயின் ரூனி கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென் றார். இதுவே ரூனியின் 200வது இங்கிலிஷ் பிரிமியர் லீக் கோல் ஆகும். ஆனால் எவர்ட்டனுக்கு இருந்த சாதக நிலை நீடிக்க வில்லை. இடைவேளைக்கு ஒரு நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்தபோது அக்குழுவின் கைல் வாக்கருக்கு இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதன் விளைவாக அவருக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். இதனால் மீதமுள்ள ஆட்டத் தை வெறும் பத்து பேருடன் தொடரும் நிலை எவர்ட்டனுக்கு ஏற்பட்டது. இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் எவர்ட்டன் முன்னிலை வகித்தது. இந்நிலையில், பிற்பாதி ஆட்டத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் மாற்று ஆட்டக்காரராக சிட்டிக்குக் களமிறங்கினார். ஆட்டத்தின் 82வது நிமிடத் தில் அவர் அனுப்பிய பந்து எவர்ட்டனின் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலைக்குள் புகுந்தது.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் சிட்டியின் மோர்கன் ஷ்னைடெர்லினுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதனால் அவருக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத் திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அதனைத் தொடர்ந்து இரண்டு குழுக்களும் கோல் போடவில்லை. இறுதியில் ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. “எனது ஆட்டக்காரர்கள் அனைவரின் செயல்பாட்டையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் சமநிலை கண்டதால் இரண்டு புள்ளிகளை இழந்து விட்டோம். “ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கோல் போடும் பல வாய்ப்புகளை நழுவவிட்டோம்,” என்று சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்தார்.

ஆட்டம் முடிய ஏறத்தாழ எட்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது பந்தை வலைக்குள் சேர்த்து ஆட்டத்தைச் சமன் செய்த மான்செஸ்டர் சிட்டியின் ரஹீம் ஸ்டெர்லிங் (நடுவில்). இதன் விளைவாக எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டம் சமநிலையில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon