ஓட்டுநரைக் கண்டித்த வரலட்சுமி

திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும், இணையத் தளங்களில் புதுப் படங்களை வெளியிடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்த் திரையுலகத்தினர் அரசாங்கத்திடம் மன்றாடி வருகின்றனர். இந்நிலையில், இணையம் வழி தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தைப் பார்த்துள்ளார் நடிகை வரலட்சுமியின் கார் ஓட்டுநர். படப்பிடிப்புக்காகச் சென்ற இடத்தில் வரலட்சுமி தன் வேலையில் மூழ்கியிருக்க, அவரது ஓட்டுநர் திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். எப்படியோ இதைக் கண்டுபிடித்துவிட்ட வரலட்சுமி கடுங் கோபம் கொண்டாராம். திரைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களே இவ்வாறு தவறு செய்யலாமா? சட்டத்தை மீறலாமா? என்று சரமாரி கேள்விகளால் ஓட்டுநரைத் துளைத்தெடுத்துவிட்டாராம். பிறகென்ன! நடந்தவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் விவரித்துப் பதிவிட்டுள்ளார். அவரது இச்செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கத் தலைவர் விஷாலும் திருட்டு விசிடியை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

Loading...
Load next