ரசிகர்களுக்கு திரிஷா விடுத்த திடீர் வேண்டுகோள்

படப்பிடிப்பின்போது தன்னுடன் புகைப் படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் திரிஷா. இதனால், இயக்குநர்களின் உழைப்பு வீணாகிவிடும் என்றும் கூறியுள்ளார். “ஒரு படத்தில் கதாபாத்திரங்க ளின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து, யோசித்து முடிவெடுப்பது இயக்குநர்தான். எனவே கதா பாத்திரங்களின் தன்மை குறித்து அவர் விரும்பும் நேரத்தில் வெளி யிட வேண்டும் என்றே நினைப்பார். “அந்த வேலையை நாம் முன் கூட்டியே செய்வது அவரை அவம திப்பது போலாகிவிடும்,” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் திரிஷா. ஏன் என்னவாயிற்று? ‘96’ படப்பிடிப்பு தளத்தில் திரிஷாவோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை யாரோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்தே அவரது வேண்டு கோள் வெளியாகியுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக திரிஷா நடித்து வரும் படம் ‘96’. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திரிஷாவோடு ரசிகர்களின் குடும்பத்தினர் புகைப் படம் எடுத்துக்கொண்டனர். அப்படத் தில் திரிஷா உடல் இளைத்துக் காணப்படுகிறார்.

Loading...
Load next