அமெரிக்க 7வது கடற்படை தளபதி பதவி நீக்கம்

அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆசிய கடலில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி கடற்படை வீரர்கள் பலர் பலியானதையடுத்து அமெரிக்க ஏழாவது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கப்படு கிறார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏழாவது கடற்படைக்குத் தலைவராக இருப்பவர் துணை அட்மிரல் ஜோசப் அக்காய்ன். அவர் நேற்று அந்தப் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தாக ஓர் அதிகாரி தெரிவித்தார். துணை அட்மிரல் அக்காய்ன் இன்னும் சில வாரங்களில் பதவி ஓய்வு பெறவிருக்கிறார்.

ஆனால் அவருடைய மேல் அதிகாரிகளுக்கு அவர் மேல் நம்பிக்கை போய்விட் டது. ஆகையால் அவரை முன்ன தாகவே பதவியிலிருந்து அகற்றி விட திட்டமிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்மைய காலத்தில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் கள் ஆசிய கடற்பகுதியில் பல விபத்துகளுக்கு உள்ளாகிவிட்டன. அவற்றில் மாண்டுவிட்ட அமெ ரிக்க கடற்படை வீரர்களின் எண் ணிக்கை 1 டஜனுக்கும் அதிகம். இதற்கிடையே, செவ்வாய்க் கிழமை பிற்பகல் நேரத்தில் அமெ ரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மெக்கைன் போர்க்கப்பலைச் சேர்ந்த மாலுமிகள் மாண்டதற்கு அது அதிக வருத்தம் தெரிவித்தது.

ஜப்பானில் உள்ள யோக்கோ சுக்கா அமெரிக்க கடற்படை தளத்தில் செய்தியாளர்களிடம் துணை அட்மிரல் ஜோசப் அக்காய்ன் உரையாற்றுகிறார். படம்: ஏஎஃப்பி