குங்ஃபூ ஆசிரியருக்குத் தண்டனை

சீன தற்காப்பு உடற்பயிற்சி அரங்கை பொது சூதாட்டக் கூடமாக பயன்படுத்திய குங்ஃபூ தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கு 10 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு $10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. டான் சோ டின், 74, என்ற அந்தப் பயிற்றுவிப்பாளர் 2017 பிப்ரவரி 14ஆம் தேதி உடற்பயிற்சி அரங்கை சூதாட்டத்துக்கு அனுமதித்ததாக ஒப்புக்கொண்டார்.