சிங்கப்பூர் நிறுவனங்கள் புனேயில் நிலம் கொள்முதல்

தெமாசெக் ஹோட்டிங்ஸ் நிறு வனத்திற்கும் ஜேடிசி கார்ப்பரேஷ னுக்கும் சொந்தமான சிங்கப்பூர்= ஜிஐசி மற்றும் அசென்டாஸ் சிங்பிரிட்ஜ் குழுமம் ஆகிய இரண் டும் இந்தியாவின் புனே நகரில் 16 ஏக்கர் (6.5 ஹெக்டேர்) துண்டு நிலத்தை வாங்கியிருக்கின்றன. ‘அசென்டாஸ் இந்தியா வளர்ச்சி செயல்திட்டத்தின்’கீழ் இடம்பெறும் இந்தக் கொள்முதல் இரண்டாவது முதலீடாகும். புனே கோகினூர் குழுமத்திட மிருந்து அந்த நிலம் வாங்கப்பட்டு இருக்கிறது. அது புனே நகரின் முக்கியமான புறநகர் வணிக வட்டாரத்தில் உள்ள கராடி என்ற பகுதியில் அமைந்துள்ளது. அதன் அருகே குடியிருப்புக் கட்டடங்கள், ஹோட்டல்கள், தொழில் பூங்காக்கள், கடைத் தொகுதிகள், கல்வி, மருத்துவ நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்திருக்கின்றன. அந்தத் துண்டு நிலத்தில் மொத்தம் 2.2 மில்லியன் சதுரஅடி பரப்பில் கட்டடங்களைக் கட்ட லாம். அந்த நிலம் தகவல்தொழில் நுட்பம் மற்றும் தகவல்தொழில்நுட்ப சிறப்புப் பொருளியல் மண்டல பூங் காவாக உருவாக்கப்படும். முதல் கட்டம் 2020ல் ஒரு மில்லியன் சதுரஅடி பரப்பளவில் கட்டி முடிக்கப்படும்.

Loading...
Load next