சுடச் சுடச் செய்திகள்

முதியவரை தாக்கியவருக்குச் சிறை

ஒரு மின்தூக்கியில் முதியவர் ஒருவரை தாக்கியதற்காக சான் சுன் டெக், 53, என்ற துப்புரவாளருக்கு நேற்று ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அங் மோ கியோ அவென்யூ 10ல் இருக்கும் புளோக் 439ல் ஓய்வு பெற்றவரான டியோ ஹுங் மெங் என்பவரை காயப் படுத்தியதாக சான் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கு முன்பே இந்த இருவருக்கும் பிரச்சினை என்று நீதிமன்றத்தில் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

திரு டியோவும் அவருடைய மனைவியும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு தங்கள் வீட்டிற்குப் போய்கொண்டிருந்தபோது மின்தூக்கிக் கூடத்தில் சான் இருந்ததை அவர்கள் பார்த்தனர். வேறு மின்தூக்கியில் டியோ சென்றபோது மேல்மாடியில் சைக்கிளுடன் சான் மின்தூக்கிக்குள்ளே வந்தார். உள்ளே வந்ததும் அவர் தன் சைக்கிளை ஒரு சுற்று சுற்றினார். அதன் சக்கரம் திரு டியோ காலில் இடித்தது. அதை திரு டியோ காலால் உதைத்தார். அப்பொழுது சான் திரு டியோவின் முகத்தில் குத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon