பார்சிலோனா குழுவின் சமூக ஊடகப் பக்கங்களில் ஊடுருவல்

பார்சிலோனா: பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்குச் சென்றதையடுத்து, அவரது இடத்திற்குப் பொருத்தமான வீரரை ஒப்பந்தம் செய்ய முடியாமல் தவித்து வருகிறது முன்னணி ஸ்பானிய குழுவான பார்சிலோனா. இந்த நிலையில், ‘அவுட்மைன்’ எனும் இணைய ஊடுருவல் குழு, பார்சிலோனாவின் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் நுழைந்து ஒரு பொய்த் தகவலை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியது அக்குழுவிற்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல் அமைந்தது. பிஎஸ்ஜியின் அர்ஜெண்டினா வீரர் ஏங்கல் டி மரியா, பார்சிலோனாவுடன் இணைந்துவிட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. இதை அக்குழுவின் ரசிகர்களும் உண்மை என நம்பினர். சிறிது நேரத்திற்குப் பின் அதில் உண்மையில்லை, வேடிக்கைக்காக அவ்வாறு செய்தோம் என்று ‘அவுட்மைன்’ குழுவே தெரிவித்துவிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி