ஓய்வை அறிவித்தார் ரூனி

லண்டன்: அதிக கோல்களை அடித்துள்ள இங்கிலாந்துக் காற்பந்து வீரரான வெய்ன் ரூனி அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து சார்பில் 119 போட்டிகளில் விளையாடி 53 கோல்களை அடித்து இருக்கும் 31 வயது ரூனி தொலைபேசி வாயிலாக தமது ஓய்வு முடிவைப் பயிற்றுவிப்பாளர் சௌத்கேட்டிடம் தெரிவித்தார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் 2004 முதல் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்காக விளையாடி வந்த ரூனி, இப்பருவத்தில் மீண்டும் எவர்ட்டன் குழுவில் இணைந்தார்.