இது அநீதி: குமுறும் ரொனால்டோ

மட்ரிட்: சிவப்பு அட்டை காட்டித் தம்மை வெளியேற்றிய நடுவரைக் கையால் தள்ளியதற்காக ரியால் மட்ரிட் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆட்டத் தடை உறுதி செய்யப்பட்டது. ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரியால் குழு ஸ்பானிய விளையாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மனுவை ஏற்காமல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரொனால்டோ, “இன்னொரு புரிந்துகொள்ள முடியாத தீர்ப்பு. அநீதிகளால் என்னை வீழ்த்திவிட முடியாது. நான் இன்னும் வலுவானவனாக மீண்டுவருவேன்,” என்று கூறியிருக்கிறார்.

Loading...
Load next