மூன்று சாதனைகள் முறியடிப்பு

கோலாலம்பூர்: ஒலிம்பிக் வெற்றி யாளரான சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், தமக்குப் பிடித்தமான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் புதிய சாதனை யுடன் தங்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார். தென்கிழக்காசிய விளையாட் டுப் போட்டிகளில் 100 மீ. வண் ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் ஸ்கூலிங் தங்கம் வென்றிருப்பது இது மூன்றாவது முறை. 22 வயதான ஸ்கூலிங் 51.38 வினாடி களில் பந்தய தூரத்தை நீந்திக் கடந்தார். தென்கிழக்காசிய விளை யாட்டுப் போட்டிகள் வரலாற்றில் 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலை 52 வினாடிகளுக்குள் ஒருவர் முடித்திருப்பது இதுவே முதல்முறை.

2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இதே பிரிவில்தான் 50.39 வினாடி களில் பந்தய தூரத்தைக் கடந்து ஸ்கூலிங் தங்கம் வென்றார். முன்னதாக, 50 மீ. வண்ணத் துப்பூச்சி பாணி நீச்சலிலும் 4x100 மீ. எதேச்சைபாணி அஞ்சல் நீச்ச லிலும் வாகை சூடி இரண்டு தங்கப் பதக்கங்களைத் தனதாக்கி இருந்தார் ஸ்கூலிங். இதற்கிடையே, சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனையான 25 வயது குவா டிங் வென் 100 மீ. எதேச்சைபாணி நீச்சலில் தனது சாதனையை தானே முறியடித்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தனது சாதனையை தானே முறியடித்து, மூன்றாவது முறையாகத் தங்கம் வென்றார் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், 22. முன்னதாக நேற்றுக் காலையில் நடந்த தகுதிச் சுற்றின்போது 53.53 வினாடிகளை எடுத்துக்கொண்டு இரண்டாமிடம் பிடித்த ஸ்கூலிங், இறுதிப் போட்டியில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்தார். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி