செப்டம்பர் மாதம் ஓய்வுபெறும் மலேசிய போலிஸ் படைத் தலைவர்

கோலாலம்பூர்: மலேசியாவின் போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறவிருப்பதாக இணையப்பக்கத் தகவல் தெரிவிக்கிறது. மலேசியாவில் அடுத்த பொதுத்தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்ற யூகம் நிலவும் வேளையில் திரு காலிட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளதாக திரு காலிட் அறிவித்துள்ளார். அவருக்கு 60 வயதாவதைத் தொடர்ந்து அவர் பதவி ஓய்வு பெறவிருப்பதாகக் கூறியுள்ளார். “இது என் சொந்த முடிவு. ஓய்வுபெற வேண்டிய தருணம் வந்துவிட்டது”, என திரு காலிட் தெரிவித்தார். காலிட், 1976 ஆம் ஆண்டு அவரது 19வது வயதில் போலிஸ் படையில் சேர்ந்தார். பின்னர் அவர் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1995 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். 2013ஆம் ஆண்டு திரு காலிட் போலிஸ் படைத் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவர் பதவி ஓய்வு பெற்றதும் போலிஸ் படைத் துணைத் தலைவர் 59 வயது நூர் ர‌ஷிட் இப்ராகிம், போலிஸ் படை தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon