சுடச் சுடச் செய்திகள்

மென்காற்றாய் வரப்போகும் சூர்யாவின் புதுப் படம்

சூர்யாவின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகி யாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கி உள் ளார் இயக்குநர்.

இந்தப் படம் குறித்த எதிர் பார்ப்பு சூர்யாவின் ரசிகர்களுக்கு மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் இப்படம் மென்மையான கதையம்சம் கொண்டது என்கிற ரீதியில் ஒரு தகவலை வெளி யிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். “புயலுக்குப் பின் மெல்லிய காற்று உங்களை வரவேற்கும். அதாவது அஜித்தின் ‘விவேகம்’, விஜய்யின் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு புயலான படங்கள் வெளிவந்து ஓய்ந்த பிறகு, என்னுடைய ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற மெல்லிய காற்று உங்களை வரவேற்கும்,” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவுக்கு இப்படத்தில் சிபிஐ அதிகாரி வேடம். நீண்ட நாட்களுக்குப் பிறகு செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித் துள்ளார். இப்படத்துக்கு இசை அனிருத். தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon