அடுத்த வாரத்தில் ரூ.200 வெளியீடு

புதுடெல்லி: புதிய இருநூறு ரூபாய் நோட்டு அடுத்த வாரத்தில் வெளி யிடப்படவிருப்பதை மத்திய அரசு நேற்று உறுதிசெய்துள்ளது. தானியங்கி வங்கி களிலும் வங்கிகளி லும் புதிய இருநூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். அத்துடன் புதிய ஐம்பது ரூபாய் நோட்டும் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள ஐம்பது ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. கள்ள நோட்டுகள் அச்சடிக்கமுடியாத வகையில் புதிய நோட்டுகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. புதிய இருநூறு ரூபாய் நோட்டுகள் சில்லறை வர்த்தகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Load next