சுடச் சுடச் செய்திகள்

36 கட்டடங்களுக்கு தீ அபாயம்

சிங்கப்பூரில் மொத்தம் 36 கட்ட டங்களின் வெளிப்புற மேற்பூச்சு தீ பாதுகாப்புத் தரநிலைகளின்படி இல்லாதிருக்கலாம் எனக் கூறப் படுகிறது. அவற்றுள் ஒன்றான டோ குவான் சாலை யிலுள்ள தொழிற் சாலைக் கட்டடத்தில் கடந்த மே மாதம் தீ மூண்டதில் ஒருவர் உயிரிழந்தார். அந்தக் கட்டடங்களில் 15 கட்டடங்கள், தீயை விரைவாகப் பரவச் செய்யும் ‘தீப்பற்றக்கூடிய பூச்சுகள்’ பயன்படுத்தப்பட்டிருப் பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாகத் திறக்கப்பட்ட தெம்பனிஸ் மையம், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியின் சில பகுதிகள், ‘தி பீக் @ கேர்ன்ஹில் I மற்றும் II’ ஆடம் பரக் கூட்டுரிமை குடியிருப்புகள் ஆகியவையும் அந்தக் கட்டடங் களுள் அடங்கும். மொத்தம் 41 கட்டடங்களில் அமெரிக்க தயாரிப்பான ‘அலு பாண்ட்’ எனும் அலுமினியமும் பிற பொருட்களும் சேர்ந்த கட்டு மானப் பலகைகள் பயன் படுத்தப்பட்டிருப்பதாக போலிசாரின் முதற் கட்டப் புலனாய்வில் தெரியவந்து உள்ளது.

அலுபாண்ட் தயாரிப்புகளின் ஒரே உள்ளூர் விநியோகிப்பாளர் தனது சரக்குக்கிடங்கில் வெவ் வேறு தரநிலைகளைக் கொண்ட பலகைகளை மாற்றி மாற்றி வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது எனவே, தீப்பரவல் தடுப்புத் தரங்களை நிறைவேற்றாத வெளிப் புற மேற்பூச்சு அக்கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதன் தொடர்பில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை போலிசில் புகார் செய்திருப்பதாக உள்துறை அமைச்சும் குடிமைத் தற்காப்புப் படையும் வியாழக் கிழமை கூட்டாக நடத்திய செய்தியா ளர் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் “கட்டடங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என்பதை உறு திப்படுத்தி, கட்டடத்தின் வெளிப் புறத்தில் கட்டுமானப் பலகைகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருந் தால் அதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சரிசெய்ய கட்டட உரிமையாளர்களுடன் அணுக்கமாகச் செயல்படுவதாக,” குடிமைத் தற்காப்புப் படையின் அறிக்கை குறிப்பிட்டது. சிங்கப்பூரில் அலுபாண்ட் பலகை பயன்படுத்தப்பட்டுள்ள 41 கட்டடங்களில் ஐந்து கட்டடங் களில் குடிமைத் தற்காப்புப் படையின் சோதனையில் தேறின. 21 கட்டடங்கள் இன்னும் சோதிக்கப்படவில்லை. சோதனையில் தேறாத அல்லது இன்னும் சோதிக்கப்படாத கட்ட டங் களின் பட்டியல் குடிமைத் தற்காப்புப் படையின் இணையத் தளத்தில் வெளியிடப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon