கூட்டணி: தந்தை வழியில் ஸ்டாலின்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, புதிது புதிதாக பிரச்சினைகள் கிளம்பி வருவதால் ஆட்சியைத் தக்கவைக்க அதிமுக போராடி வருகிறது. இந்தத் தருணத்தில் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் முன்னைப் போல துடிப்பாகவும் நல்ல உடல்நலத்துடனும் இருந்தி ருந்தால் எப்போதோ அதிமுகவை அகற்றிவிட்டு, ஆட்சியைப் பிடித் திருப்பார் என்றும் செயல் தலை வரான ஸ்டாலினுக்கு அவரைப் போன்று திறமையில்லை என்றும் ஒருசாரார் பேசி வருகின்றனர். ஆனால், சமயம் பார்த்து அடிக்கும் வகையில் ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார் என்பதை உணர்த்தும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்பது அரசியல் கவனிப்பாளர் களின் கணிப்பு. ‘அதிமுகவினர் தங்களுக்குள் அடித்துக்கொள்ளட்டும். அதற் குள் நமது கரங்களை வலுப் படுத்திக் கொள்வோம்’ என்ற வகையில் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து மூன்று முறை திமுக தோல்வி கண்டது. இதற்கு, சரியான கூட்டணி அமையாததே காரணம் எனச் சொல்லப்படுகிறது.