மலேசிய பிரதமர் நஜிப்பை செப்டம்பரில் டிரம்ப் சந்திப்பார்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி வா‌ஷிங்டனில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை வரவேற்றுப் பேசவிருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசிய அதிகாரிகளும் இதனை உறுதிப் படுத்தியுள்ளனர்.

திரு டிரம்ப் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து திரு நஜிப் வா‌ஷிங்டன் செல்லவிருப் பதாக மலேசியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. தேசிய பாதுகாப்பு, பயங்கர வாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்தும் வர்த்தகம் முதலீடு ஆகிய துறைகளில் இரு நாடு களின் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கும் அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதிப் பார்கள் என்றும் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித் தது. மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனம் 1எம்டிபியின் நிதி விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் நீதித் துறை புலன்விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் திரு நஜிப்பின் வா‌ஷிங்டன் வருகை இடம் பெறுகிறது.

இந்த விவகாரத்தால் இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வழிகள் குறித்து தாங்கள் பேச்சு நடத்தவிருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா-மலேசியா இரு தரப்பு உறவின் 60வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு திரு நஜிப் அங்கு செல்லவிருக்கிறார். பத்து ஆசியான் நாடுகளின் தலைவர்களில் முதன் முதலாக திரு நஜிப் அமெரிக்க அதிபரை சந்திக்கவுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!