ஏவுகணை திட்டத்தில் முன்னேறும் வடகொரியா

சோல்: வடகொரியா அதன் நவீன ஏவுகணைத் திட்டத்தில் எதிர் பாராத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை வடகொரிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் புலப்படுத்து வதாக நிபுணர்கள் தெரிவித்துள் ளனர்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இந்த வாரத் தொடக் கத்தில் அங்குள்ள முக்கிய தொழிற்சாலையை பார்வையிட்ட போது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் திரவ எரிபொருளால் இயங்கும் நவீன ரக ராக்கெட்டுகள் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து அங்குள்ள விஞ்ஞானிகள் அவரிடம் விளக் கிக் கூறினர். எரிபொருளால் இயங்கும் நவீன ராக்கெட் என்ஜின்கள் மற்றும் ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு அனுப்பும் ஆபத்தான வெடிகுண்டுகளை அதிக அளவில் தயாரிக்கு மாறு திரு கிம், அங்கிருந்த விஞ்ஞானி களுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் கூறின.

வடகொரியா ‘புகுக்சோங்-3’ எனப்படும் நவீன ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதை தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் ஒன்று உணர்த்துவதாக ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். ‘புகுக்சோங்-1’ ரக ஏவு கணையை வடகொரியா சென்ற ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி மேற்கொண்டது. இந்த ஏவுகணை 500 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய ஆற்றல் மிக்கது. இதைவிட சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பில் வட கொரியா ஈடுபட்டிருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon