சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவு: 8 பேரைக் காணவில்லை

ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவைத் தொடர்ந்து 8 பேரைக் காணவில்லை என்று போலிசார் கூறினர். ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவின்போது அந்த 8 பேரும் அப்பகுதியில் இருந்தாக போலிஸ் அறிக்கை கூறுகிறது. புதன்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவின்போது பாறைக் கற்கள் உருண்டுவிழுந்ததாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆரம்பத்தில் நிலச்சரிவின் போது யாருக்கும் காயம் ஏற்பட வில்லை என்று போலிசார் கூறியிருந்தனர். ஆனால் நிலச் சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக் குழு வினர், அங்கு மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் களைக் காணவில்லை என்று கூறியுள்ளனர். ஹெலிகாப்டர் உதவி மூலம் தேடும் பணி இரவு பகலாக தொடர்கிறது என்று மீட்புப் பணியாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போலிசுக்கு ஆதரவாகப் பேரணியில் ஈடுபட்ட ஹாங்காங் மக்கள்மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2019

ஹாங்காங்கில் போலிசுக்கு ஆதரவாக பேரணி

தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பிய கிரேக், வேறு வழியின்றி முதலையின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டி, அதன் கவனத்தை திசைதிருப்ப வேண்டியதாயிற்று. படம்: அன்ஸ்பிளாஷ்

16 Nov 2019

முதலையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்