சீனா, ஹாங்காங்கில் பயங்கர சூறாவளி: 16 பேர் பலி

ஹாங்காங்: சீனாவின் கடலோரப் பகுதிகளையும் ஹாங்காங்கையும் தாக்கிய ஹாட்டோ எனும் சூறாவளிக் காற்றில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். புயல் காற்றின் சீற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனாவின் மக்காவ் நகரில் எட்டுப் பேர் மற்றும் குவாங்டோங் மாநிலத்தில் நால்வர் உயிரிழந்ததாக அர சாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். வீசிய பலத்த புயல் காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புயலின் தாக்கத்தால் மக்காவ் நகரில் மின்கம்பங்கள் சாய்ந்து நகரமே இருளில் மூழ்கியதாகவும் இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டது. முன்னதாக இப்புயல் ஹாங்காங்கை புரட்டிப்போட்டது. புயலில் சிக்கி அங்கு பலர் உயிரிழந்தனர்.

வீசிய பலத்த காற்றில் சீனாவின் மக்காவ் நகரில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon