குவா ஸென் வென் 4வது தங்கம்

கோலாலம்பூர்: சிங்கப்பூர் வீரர் குவா ஸென் வென் 100 மீட்டர் மல்லாந்து நீச்சலில் தங்கம் வென்றார். தென்கிழக்காசிய விளை யாட்டுப் போட்டிகளில் அவர் வென்றுள்ள நான்காவது தங்கப் பதக்கம் இது. 20 வயது குவா, பந்தய தூரத்தை 54.81 விநாடிகளில் கடந்து வெற்றியைத் தனதாக்கி னார். முதலில் 17 விநாடிகள் பின் தங்கியிருந்த குவா, இந்தோனீ சியாவின் சுதர்த்தவாவைப் பின் னுக்குத் தள்ளி முன்னேறினார். இதற்கிடையே சிங்கப்பூர் வீராங்கனையான சமந்தா இயோ 200 மீட்டர் தனிநபர் பலபாணி நீச்சலில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு மட்டுமல்லாமல் புதிய தேசிய சாதனையையும் எட்டியுள்ளார். பந்தய தூரத்தை 2 நிமிடம் 16.85 விநாடிகளில் கடந்த இவர், கடந்த 2004ஆம் ஆண்டு ஜோஸ்லின் இயோவின் சாத னையை முறியடித்துள்ளார். அவரைவிட ஒரு விநாடி குறைவாக பந்தய துரத்தைக் கடந்துள்ளார் சமந்தா இயோ.

Loading...
Load next