உருட்டுப்பந்து: ஆடவர் தங்கம், மகளிர் வெள்ளி

கோலாலம்பூர்: உருட்டுப்பந்தில் சிங்கப்பூர் ஆடவர் குழு தங்கப் பதக்கம் வென்றுள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு, தென்கிழக்காசிய போட்டி களில் உருட்டுப்பந்தில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது சிங்கப்பூர். சிங்கப்பூர் ஆடவர் குழு 6,399 பின்கள் பெற்ற நிலையில் எதிர் அணியான மலேசியா 6,280 பின்கள் பெற்றது. 6,278 பின்கள் பெற்ற தாய் லாந்து குழு வெண்கலப் பதக்கம் வென்றது. குழுப் போட்டியில் சிங்கப்பூர் வென்றுள்ள இரண் டாவது தங்கம் இது. இதற்கிடையே, சிங்கப்பூர் மகளிர் பிரிவு வீராங்கனைகள் மலேசியாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். மகளிர் பிரிவில் மலேசியா 6,264 பின்களும் சிங்கப்பூர் 6,203 பின்களும் பிலிப்பீன்ஸ் 6,075 பின்களும் பெற்றனர்.

Loading...
Load next