காதலனைக் கரம்பிடித்தார் பிரியாமணி

பிரபல நடிகை பிரியாமணிக்கு நேற்று முன்தினம் மும்பையில் திருமணம் நடந்தேறியது. அவர் தொழிலதிபர் முஸ்தபா ராஜுவை மணந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பிரியாமணிக்கு ‘பருத்திவீரன்’ மிகச்சிறந்த படமாக அமைந்தது. இப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் முன்னணி நடிகை யாக வலம் வந்த பிரியாவுக்கும், மும்பை தொழிலதிபர் முஸ்தபா வுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஓராண்டு காலமாக காதலித்து வந்த நிலையில், மும்பையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, நேற்று பெங்களூ ரில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்கப் போவதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்