வடிவேலுக்கு ஜோடியான பார்வதி

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, பார்வதி ஓமனக்குட்டன் என இந்திய, உலக அளவில் அழகிப் பட்டம் வென்ற பலர், தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியது தெரிந்த சங்கதி தான். ஆனால் இவர்கள் அனைவருமே பின்னர் இந்திப் படங்களில் நடிப்பதிலேயே முனைப்புக் காட்டினர். அந்த வகையில் அஜீத் நடித்த ‘பில்லா-2’ மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தார் பார்வதி ஓமனக்குட்டன். இதையடுத்து அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெயரெடுத்த போதிலும் அம்மணியால் தமிழில் நிலைத்திருக்க முடியவில்லை. இத்தனைக்கும், தமிழில் நடிக்கவே விரும்புகிறேன் என்றும், தமிழ் ரசிகர்களை நேசிப்பதாகவும் பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார் பார்வதி. எனினும் கோடம்பாக்க இயக்குநர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பவே இல்லை. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பார்வதி. கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அழகியாகவும் பின்னர் அனைத்துலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடமும் பிடித்த இவர், தற்போது வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது தான் ரசிகர்களை புருவம் உயர்த்த வைக்கும் தகவல். சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில், உருவான வெற்றிப்படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளனர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்த முயற்சி கைகூடி இருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon