சுடச் சுடச் செய்திகள்

ஆதார்: தனி மனித ரகசியம் காக்கும் உரிமைக்கு எதிரானது

புதுடெல்லி: இந்திய அரசியல் சாசனப்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைக் காப்பது அடிப்படை உரிமை என்று ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. ஆதார் அடையாள அட்டைக் காக மக்களின் கைரேகை, கருவிழிப்பதிவு போன்ற தனிப் பட்ட விவரங்களைச் சேகரிப்பது தனி மனித ரகசியம் காக்கும் உரிமைக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன குழு விசாரித்து வந்தது.

இந்த விசாரணையின்போது 1962ஆம் ஆண்டு நடந்த கரக் சிங், 1954ஆம் ஆண்டு நடந்த எம்.பி.சர்மா வழக்குகளில் ஏற் கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆராயப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், தனிமனித ரகசியம் காப்பது அரசியல் சாச னம் வழங்கிய அடிப்படை உரி மையே என்று தீர்ப்பளிக்கப்பட் டது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதி களுமே தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்ற கருத்தில் மாறுபடவில்லை.

தீர்ப்பை வாசித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கடந்த 1954ஆம் ஆண்டு ஆறு நீதிபதிகள் கொண்ட குழு, 1962ஆம் ஆண்டு எட்டு நீதிபதிகள் கொண்ட குழு ஆகியவை அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும் கூறினார். மேலும் ஆதார் அடையாள அட்டையை அரசு சேவை களுக்குக் கட்டாயமாக்குவது அடிப்படை உரிமையை மீறும் செயல் ஆகும் என்றும் அவர் கூறினார். இந்த தீர்ப்பை நடிகர் கமல் ஹாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “உச்சநீதிமன்றத்தின் முடிவானது கண்காணிப்பு மூல மான அடக்குமுறை என்ற பாரதிய ஜனதாவின் கொள்கையை நிரா கரிக்கும் ஒலியாகும்,” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon