சுடச் சுடச் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஃபாரிட் கான்

வர்த்தகரான ஃபாரிட் கான் அதிபர் தேர்தலில் போட்டியிடு வதற் கான விண்ணப்பத்தை நேற்று தேர்தல் துறையில் சமர்ப் பித்தார். வட்டார மரின் கடற்துறை சேவை நிறுவனமான போர்பன் ஆஃப்ஷோர் ஏ‌ஷியா என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான 61 வயது திரு கான், தகுதிச் சான்றிதழ் மற்றும் சமூக சான்றிதழ்களுக்கான விண் ணப்பங்களை சமர்ப்பித்தார். அவருடன் நான்கு ஆதரவாளர் களும் வந்திருந்தனர். மலாய் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள மூவரில் பாகிஸ் தானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரரான திரு கானும் ஒருவர். நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப்பும் தொழிலதிபரான முகம்மது சாலே மரிக்கானும் மற்ற இருவர். தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட வேண்டும் என்றால், அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் $500 மில்லியன் முதலீடு உள்ள நிறுவனத்தை நிர்வகித்திருக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. திரு கானின் நிறுவனம், முதலீட் டாளர் களின் பங்கு முதலீடாக கிட்டத் தட்ட யுஎஸ் $300 மில்லயனைப் (413 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பெற்றுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் அதிபர் தேர்தல் குழு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திரு கானுக்கு போட்டியிட அனுமதி வழங்கலாம். தேர்தல் இல்லாமல் போகும் சாத்தியம் குறித்துக் கேட்டபோது, “எனக்கு ஏமாற்றமாக இருக்கும். பலரும் ஏமாற்றம் அடைவார்கள் என நினைக்கிறேன்,” என்றார் திரு கான். தமது குழு தேர்தலில் போட்டி யிடத் தயாராக உள்ளதாகவும் அவருக்குத் தகுதிச் சான்றிதழ் கிடைத்ததும் பிரசாரத்தைத் தொடங்கப்போவதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் துறைக்கு வந்த திரு ஃபாரிட் கான். படம்: வான் பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon