தோல்வி கண்டு துவளாத வீரர் தங்கவாள் பெற்றார்

சுதாஸகி ராமன்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் ‘ஸ்பெஷலிஸ்ட்’ பயிற்சிப் பள்ளி யில் 22 வார பயிற்சியை முடிக்க விருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார் ராஜ் கிஷண் ரவிசந்திரன். பயிற்சியை முடிப்பதற்குத் தேவை யான தகுதிகளை பெறாததால் அவர் பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். முதலில் தோல்வியால் மனம் தளர்ந்து போனாலும் மீண்டும் பயிற்சிப் பள்ளியில் சேர முடிவு செய்தார் ராஜ் கிஷண். இரண்டாம் முறை வாய்ப்புக் கிடைத்தபோது, அதைத் தவற விடக்கூடாது என உறுதிபூண்டார். விடாமுயற்சியுடன் செயல்பட்டு, ராணுவ அறிவு, திறன்களை மேம்படுத்தினார். பயிற்சியில் சிறந்து விளங்கி சிறந்த வீரராகத் தேர்ச்சி பெற்றார் 25 வயது ராஜ் கிஷண். பாசிர் லாபா முகாமில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு அணி வகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்வி, தகவல் தொடர்பு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, ராஜ் கிஷணுக்கு சிறந்த வீரருக்கான தங்கவாள் விருதை வழங்கினார்.

சிறப்பு வீரர்கள் (ஸ்பெஷலிஸ்ட்) பயிற்சி முடித்து தங்கவாள் விருது பெற்ற வீரர் ராஜ் கிஷண் ரவிசந்திரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon