சுடச் சுடச் செய்திகள்

மியன்மாரில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 32 பேர் பலி

யங்கூன்: மியன்மாரில் ராக்கைன் மாநிலத்தில் உள்ள 24 போலிஸ் சாவடிகள் மீது கிளர்ச்சியாளர்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியதில் மொத்தம் 32 பேர் உயிரிழந்ததாக ராணுவம் தெரி வித்துள்ளது. அத்தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 21 பேரும் பாதுகாப்புப் படை வீரர்கள் 11 பேரும் கொல்லப்பட்டதாக மியன்மார் ராணுவம் தெரிவித் துள்ளது. ரோஹிங்யா கிளர்ச்சியாளர்கள் சுமார் 150 பேர் அப்பகுதியில் உள்ள ராணுவத் தளத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் ராணுவத் தகவல்கள் கூறின. அத்தாக்குதலைத் தொடர்ந்து போலிசாருக்கும் கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் ஒரு சில பகுதி களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. ராக்கைன் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் அங்கு நடக்கும் மிகப் பெரிய மோதல் இது என்று யங்கூன் தகவல்கள் கூறுகின்றன. கடந்த அக்டோபர் மாதம் அங்கு நடந்த தாக்குதலுக்கு காரணமான ரோஹிங்யா மீட்பு ராணுவம் எனும் கிளர்ச்சிக் குழு நேற்று நடந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon