ஜப்பான்: வடகொரியா மீது கூடுதல் தடைகள்

தோக்கியோ: வடகொரியாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிக்கவிருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியாவுடன் தொடர்பு வைத்துள்ள சீன நிறுவனங்கள் மற்றும் நமிபியா நிறுவனங்களின் சொத்துகளை முடக்கவிருப்பதாக ஜப்பானிய அரசாங்கப் பேச்சாளர் யோ‌ஷிஹிட் சுகா கூறினார். வடகொரியாவுடன் தொடர்பு கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங் களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அமெரிக்கா அறிவித் திருக்கும் வேளையில் ஜப்பானும் இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது.

வடகொரியாவின் நட்பு நாடான சீனா, அமெரிக்காவின் செயலை கடுமையாகச் சாடி யுள்ளது. நமிபியா அண்மைய ஆண்டு களில் வடகொரியாவுடன் தொடர்புகளை வலுப்படுத்தி வந்துள்ளது என்று ஜப்பான் கூறுகிறது. வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்பதை ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் ஜப்பானை நெருக்கு வதற்கு இது நல்ல தருணம் என்றும் அரசாங்கப் பேச்சாளர் சுகா, செய்தியாளர்களிடம் கூறி னார். வடகொரியாவின் அணு வாயுதத் திட்டத்திற்கு கிடைக்கக் கூடிய நிதியை தடுப்பது புதிய நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் சொன்னார். வடகொரியா அண்மையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை சோதனை செய்ததைத் தொடர்ந்து அந் நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை ஐநா பாதுகாப்பு மன்றம் விதித்தது. இந்நிலையில் அமெரிக் காவின் குவாம் தீவை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத் திருந்த வடகொரியா சில நாட்களுக்கு முன்பு அத்தீவை நோக்கி தயாராக வைத்திருந்த 4 ஏவுகணைகளை அங்கிருந்து அகற்றியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறும்போது தமது ஆதரவாளர்களுடன் காணப்படும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் (நடுவில்). படம்: இபிஏ

12 Nov 2019

தற்காப்பு வாதத்தை முன்வைக்க நஜிப்புக்கு உத்தரவு

ஹாங்காங்கின் சாய் வான் ஹோ பகுதியில் துப்பாக்கியைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் குறிவைக்கும் போலிஸ் அதிகாரி. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

ஹாங்காங் கலவரம் தீவிரம்

நடைபாலத்தில் ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது. படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

12 Nov 2019

ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது