மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் அதிகரிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் அதிகரித்து வருவதாக கோலாலம்பூரில் நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பேசிய மலேசிய போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் தெரிவித்தார். மாநாட்டின் துவக்க விழாவில் மாநாட்டின் தலைவர் தானேஷ் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஆராய்ச்சி நிறுவன ஆலோசகர் உஷாதுரை, தமிழறிஞர் திருவள்ளுவர் வாழ்த்திப் பேசினர். “இந்த மாநாடு இணையத்தையும் தமிழையும் கற்றல் கற்பித்தலில் இணைக்கும் முயற்சி ஆகும். இது ஒரு தமிழ் திருவிழா. இது தமிழர்களின் அங்கீகாரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்,” என்று கூறினார் மாநாட்டில் மலேசிய போக்குவரத்து துறை சிறப்பு ஆலோசகர் எம்.கேவியஸ். “உலகத் தமிழர்கள் இடையே அன்பும் நட்பும் மேலும் வலு வடையும். தமிழ் மொழியின் தட்டச்சு, மெய்நிகர் கல்வி, தொழில்நுட்பம் மேலும் வளரும். கற்றல் கற்பித்தலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மாநாடு மூலம் தமிழ் இணையத்தில் புரட்சியை ஏற்படுத்த முடியும். மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் புதிதாக ஏழு பள்ளிகள் அமைக்கப்பட்டுள் ளன. அனைத்துத் தமிழ்ப் பள்ளி களுக்கும் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரை புத்தகம் இலவசமாக வழங்கப்படும்,” என்றார் அவர். மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, மொரீ‌ஷியஸ், சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர் கள் பங்கேற்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon