கடலில் மூழ்கிய இரண்டாவது மாலுமியின் அடையாளம் தெரிந்தது

சிங்கப்பூர் கடற்பகுதியில் கடந்த வாரம் எண்ணெய்க் கப்பல் ஒன்றுடன் மோதிய அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஜான் எஸ். மெக்கேன்’ போர்க் கப்பலிலிருந்து காணாமல் போன அக்கப்பலின் மாலுமிகளில் இரண்டாவது நபரின் அடையாளம் அவரது உடற்பாகங்களைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படையும் கடற்துறை முக்குளிப்பாளர்களும் அவரது உடற்பாகங்களைக் கண்டுபிடித்து பல்வேறு சோதனைகளை நடத்தி, அது அக்கப்பலின் மின்னணுவியல் தொழில்நுட்பரான டஸ்டின் லுவிஸ் டோயோனுடையது (படம்) என்று வியாழக்கிழமை இரவு உறுதிப்படுத்தினர் என்று அமெரிக்காவின் 7வது கடற்படைப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

Loading...
Load next