உணவங்காடி நிலையங்களில் மின் கட்டணமுறை ஆய்வு

உணவங்காடி நிலையங்கள், வீட மைப்பு வளர்ச்சிக் கழக காப்பிக் கடைகள், குடியிருப்பு வட்டாரக் கடைகள் ஆகியவற்றில் ரொக்க மில்லா கட்டணமுறையை அறி முகப்படுத்த முயற்சி எடுக்கப்படு கிறது. இதற்கான மின்னியல் கட் டணமுறைகளைக் கோரும் தகவல் கோரிக்கையை நான்கு அரசாங்க அமைப்புகள் நேற்று கூட்டாக வெளியிட்டன. அறிவார்ந்த தேசத்தை உரு வாக்கும் தொலைநோக்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூரை மின்- கட்டணச் சமுதாயமாக்கும் தேசிய முனைப்புக்கேற்ப இம்முயற்சி எடுக்கப்படுவதாக தேசிய சுற்றுப் புற வாரியம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), சிங்கப்பூர் நாணய ஆணையம், அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவல கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை தெரிவித்தது.

உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், குடியிருப்பு வட் டாரக் கடைகள் ஆகியவற்றுக்கு மக்கள் அடிக்கடி செல்கிறார்கள். எனவே, எளிமையான, வசதியான, ‘மகிழ்ச்சியுடன் பயன்படுத்தக் கூடிய’ மின்-கட்டண முறையை வழங்குவது இலக்கு என அர சாங்க அமைப்புகள் கூறின.

உணவங்காடி நிலையங்களுக்கும் குடியிருப்பு வட்டாரக் கடைகளுக் கும் செல்லும் மக்களுக்கு எளிமையான மின்-கட்டண முறையை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next