சுடச் சுடச் செய்திகள்

கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமையன்று தீர்வை செலுத்தப்படாத சுமார் 3,000 பெட்டி சிகரெட் கைப்பற்றப்பட்டது. அவற்றை 33 வயது மலேசிய ஆடவர் ஒருவர் கடத்தி வந்தார். அந்த ஆடவர் மலேசியாவில் பதியப்பட்ட ஒரு வாகனத்தை சிங்கப்பூருக்குள் ஓட்டிவந்தார். அந்த சிகரெட்டுகள் ரொட்டிகளின் நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அவற்றுக்குச் செலுத்த வேண்டிய மொத்த தீர்வை மற்றும் ஜிஎஸ்டி வரி முறையே, $232,800 மற்றும் $17,250. அந்த ஆடவரும் அவர் ஓட்டி வந்த வாகனமும் அதிலிருந்த சிகரெட்டும் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.

தீர்வை செலுத்தப்படாத சுமார் 3,000 பெட்டி சிகரெட் கைப்பற்றப்பட்டது. படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon