துறைமுகங்களின் பாதுகாப்பு தரம் உயர்த்தப்படும்

சிங்கப்பூர் துறைமுக ஆணையம் கடலில் ஏதாவது பேரிடர் ஏற்படும் போது அதைச் சமாளிக்க தான் எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அவ் வப்போது பயிற்சிகளை நடத்தி வருகிறது. அந்த ஆணையம் நேற்று நடத்திய பயிற்சியில் கடலில் ஒரு படகிலிருந்து சுமார் 100 பேர் காப்பற்றப்பட்டனர். சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அந்த அரைநாள் பாவனைப் பயிற்சியை நேற்று நடத்தியது. பயணிகள் கப்பல் ஒன்றுக்கும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பயணிகள் படகுக்கும் இடையில் ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டதாக பாவனை செய்து, பயிற்சி நடத் தப்பட்டது. அந்தப் பயிற்சியில் சுமார் 100 பேரை அப்புறப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அவர்களில் சுமார் பாதி பேர் காயம் அடைந்து விட்டதாகவும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப் பதாகவும் பாவனையாக பயிற்சி நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் துறைமுக ஆணையம் நடத்திய அவசரகால பாவனை பயணிகள் படகு பயிற்சியில் 100 பேர் ‘மீட்கப்படு கிறார்கள்’. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next