ஜூரோங் லேக் வட்டாரத்தில் கூடுதல் வேலைகள், வீடுகள்

கிட்டத்தட்ட 360 ஹெக்டர் பரப் பளவுள்ள ஜூரோங் லேக் வட் டாரத்தில் 100,000க்கு மேற்பட்ட புதிய வேலைகள் உருவாக்கப் படும் என்றும் 20,000 வீடுகள் கட்டப்படும் என்றும் நகர மறு சீரமைப்பு ஆணையம் அறிவித் துள்ளது. தொழிற்கூட நகரை சிங் கப்பூரின் இரண்டாவது மத்திய வர்த்தக வட்டாரமாக உருமாற்று வதற்கான பெருந்திட்டத்தின் வரைவை நேற்று ஆணையம் வெளியிட்டது. இதுகுறித்த முதல் அறிவிப்பு கடந்த 2008ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. புதிய ஜூரோங் லேக் வட் டாரத்தின் அருகில் அமைய இருக்கும் அதிவேக ரயில் முனையமும் துவாஸ் பெருந்துறை முகமும் கிட்டத்தட்ட 100,000 புதிய வேலைகளை உருவாக்கக் கூடும் என்றும் அந்த வேலை களை கடற்துறை, உள்கட்ட மைப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் வழங்கக்கூடும் என் றும் ஆணையம் தனது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் புதிதாக 20,000 வீடுகளைக் கட்டுவதோடு அதிகமான பூங்காக்களையும்ம் நீர்வழிகளையும் ஏற்படுத்தும் திட்டங்களும் உள்ளதாக அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Load next