பாலியல் கொடுமை: தப்பிக்க ‘குங்ஃபு’

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பெருகி வரும் வேளையில் அவற்றில் சிக்கிவிடாமல் தப்பித்துக்கொள்ள பெண் களுக்கு தற்காப்புக் கலை கள் சொல்லித் தரப்படுகின் றன. இதனைச் சொல்லித் தருவது பௌத்த சமய பெண் துறவிகள். இந்தியா =திபெத் எல்லையில் உள்ள லடாக் மலைப் பிரதேசத்தில் அவர்கள் குங்ஃபு பயிற்சி எடுத்த பின்னர் அதனை பெண்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். “துறவி என்றால் உட் கார்ந்து பிரார்த்தனை செய் வார்கள் என்று நினைக் கிறார்கள். நாங்கள் அதை விட ஒருபடி மேலே சென்று பெண்களைக் காக்கிறோம்,” என்றார் ஜிக்மே வாங் என் னும் பெயர் கொண்ட 19 வயது பயிற்றுநர். இந்தியா வில் 2015ஆம் ஆண்டு 34,651 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்தன. 2011ஆம் ஆண்டைக் காட்டி லும் இது 43 விழுக்காடு அதிகம். 82,422 பாலியல் வன்முறைச் செயல்களும் 2015ல் நிகழ்ந்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon