பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை; பலர் மரணம்

ஆன்மீகக் குரு என்று தம்மை அழைத்துக்கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங் பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளி என நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் சண்டிகர் நகரில் வன்முறை வெடித்தது. அவரது ஆதரவாளர்கள் அந்த நகரைச் சீர்குலைத்தனர். நேற்று மாலை வரை இரண்டு ரயில் நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட் டதாகத் தகவல்கள் வெளி வந் தன. கடைசியாகக் கிடைத்த தக வலின்படி வன்முறைக்கு இருபது பேர் பலியாகிவிட்டனர். வன்முறைக் கும்பலை நோக்கி போலிசார் துப் பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஊடகத்தினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு சில வாகனங்களுக்குத் தீ வைக் கப்பட்டது. முன்னதாக, தீர்ப்பைக் கேட் பதற்காக பஞ்ச்குலா நீதி மன்றம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் இருநூறாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அதனால், அப்ப குதியில் பெரும் பரபரப்பு நில வியது. ராணுவம், துணை ராணுவப் படை, போலிஸ் ஆகியவற்றைச் சேர்ந்த பல்லாயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரில் தீ வைத்து கொளுத்தப்பட்ட வாகனங்கள்.