கடினப் பிரிவில் ரியால், ஸ்பர்ஸ்

மொனாக்கோ: ஐரோப்பிய சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் இந்தப் பருவத்தில் நடப்பு வெற்றி யாளரான ரியால் மட்ரிட் குழு உடன் ஒரே பிரிவில் இடம்பெற்று இருக்கிறது இங்கிலாந்தின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு. 2017=18 சாம்பியன்ஸ் லீக்கில் எந்தக் குழுக்கள் எந்தப் பிரிவில் இடம்பெறும் என்பதற்கான குலுக் கல் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மொத்தம் 32 குழுக்கள் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில் ரியால், ஸ்பர்ஸ் குழுக் களுடன் ஜெர்மனியின் பொரு ஸியா டோர்ட்மண்ட், சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியா ஆகிய குழுக்களும் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ளன. இதுவே ‘குரூப் ஆஃப் டெத்’ எனும் பலம் பொருந் திய குழுக்கள் அடங்கிய கடின மான பிரிவாகக் கருதப்படுகிறது. ‘ஏ’ பிரிவில் பென்ஃபிகா, மான்செஸ்டர் யுனைடெட், பெசல், சிஎஸ்கேஏ மாஸ்கோ ஆகிய குழுக்களும் ‘சி’ பிரிவில் செல்சி, அட்லெட்டிகோ மட்ரிட், ரோமா, எஃப்கே கரபா குழுக்களும் இடம் பெற்றுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon