சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு

மொனாக்கோ: கடந்த பருவத்தின் சிறந்த ஐரோப்பிய காற்பந்து வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார் போர்ச்சுகல் அணித் தலைவரும் ரியால் மட்ரிட் குழு வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்). அந்த விருதை இவர் வென்றிருப்பது இது மூன்றாம் முறை. விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பார்சிலோனா ஆட்டக் காரர் லயனல் மெஸ்ஸி இடம்பிடித்திருந்த போதும் அவரால் ரொனால்டோ, யுவென்டஸ் கோல் காப்பாளர் புஃபான் ஆகியோருக்கு அடுத்த நிலையில் மூன்றாவதாகவே வர முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்