சுடச் சுடச் செய்திகள்

மேல்முறையீட்டுக்குப் பின் தங்கம்

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளை யாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் வீராங்கனை ஒருவர் தங்கம் வென்றுள்ளார். ஆனாலும், போட்டி முடிந்த மறுநாளில் தான் அந்தத் தங்கம் உறுதியானது. சிங்கப்பூர் வீராங்கனையான 30 வயது மிஷெல் சிங் 1.83 மீட்டர் உயரம் தாண்டி இருந்தார். வியட்னாமின் டுவோங் தி விய்ட் ஆனும் அதே உயரம் தாண்டியிருந்தார். இதனால் இருவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்று தொடக்கத்தில் ஒரு நடுவர் கூறினார். இதையடுத்து, முழங்கால் காயத்திற்காக ஒட்டியிருந்த பட்டையை மிஷெல் அகற்றிவிட்டார். சிறிது நேரத்தில் இன்னொரு நடுவர் வந்து, “ஒருவருக்கு மட்டுமே தங்கப் பதக்கம் தர முடியும். அதனால் உங்கள் இருவரில் யார் வல்லவர் என்பதை முடிவு செய்ய மீண்டும் ஒருமுறை போட்டியிட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டியில் 1.82 மீ. உயரத்தை மிஷெலால் தாண்ட முடியாததால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிட்டியது. இம்முறை முழங்காலில் பட்டை ஒட்டா மலேயே மிஷெல் தாண்ட வேண்டியதாகி விட்டது. ஏனெனில், போட்டி நடக்கும் பகு திக்குள் அதை எடுத்துச் செல்லக்கூடாது. இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கப்பூர்க் குழு, முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்ட பின் மீண்டும் ஒருமுறை போட்டி நடத்தி யதில் நியாயமில்லை எனக் கூறி நேற்று முன்தினம் இரவே மேல் முறையீடு செய்தது. விசாரணை முடிவில் தீர்ப்பு சாதகமாக வர, மிஷெலுக்குத் தங்கம் உறுதியானது. கடைசியாக, 1965ஆம் ஆண்டு நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி களில் சிங்கப்பூர் வீராங்கனை சியோங் வெய் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இருந்தார்.

இருவருக்கும் தங்கம் கிட்டிய மகிழ்ச்சியில் வியட்னாம் வீராங்கனையுடன் சிங்கப்பூரின் மிஷெல் சிங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon