எம்எல்ஏக்கள் தவிப்பு

புதுச்சேரி: புதுவை ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு பெண் எம்எல்ஏக்கள், விநாயகர் சதுர்த்திக்குக்கூட வீடு செல்ல முடியாததால் தவியாய்த் தவிக்கின்றனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹோட்டலில் உள்ள 19 எம்எல்ஏக்களில் ஜெயந்தி பரந்தாமன், சந்திரபிரபா, உமா மகேஸ்வரி ஆகியோர் பெண் எம்எல்ஏக்கள். இவர்கள் நான்கு நாட்களாக புதுவை ஹோட்டலில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விழாவை கொண்டாடும் வகையில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சில பெண் எம்எல்ஏக்கள் விரும்பினர்.

ஆனால் அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. பெண் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்க. தமிழ்ச் செல்வன் கட்டுப்பாட்டில் உள்ளனர். இதனால் அவரிடம் பெண் எம்எல்ஏக்கள் தங்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதற் கிடையே தினகரன் வருவார் என்றும் அவர் வந்த பிறகு முடிவு எடுக்கலாம் என்றும் பெண் எம்எல்ஏக்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தினகரனும் கடைசி வரை வரவில்லை. இதையடுத்து விநாயகர் சதுர்த்திக்கு வீட்டுக்குப் போக முடியாததால் பெண் எம்எல்ஏக்கள் வாக்கு வாதம் செய்தனர். இருப்பினும் அவர்கள் சமாதானம் செய்து வைக்கப்பட்டனர். மற்றொரு நிலவரத்தில் 19 எம்எல்ஏக் களும் நேற்று வேறு ஹோட் டலுக்கு மாற்றப்பட்டனர்.

தினகரன் ஆதரவு எம்எல் ஏக்கள் நேற்று வேறு ஹோட் டலுக்கு மாற்றப்பட்டனர். படம்: தமிழக ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon