தமிழகத்துக்கு விரைவில் விடிவு ஏற்படும்: பிரேமலதா

சென்னை: தமிழகத்துக்கு விரைவில் விடிவுகாலம் ஏற்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக பிடியிலிருந்து தமிழகம் விரைவில் மீளும் என்றார் அவர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலை மை அலுவலகத்தில் வியாழன் அன்று தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. அப்போது கட்சியின் சார்பில் ஏழை மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னை எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ரூ.50,000 நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டம் உள் ளிட்ட நலத்திட்டங்களை விஜய காந்த் வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்று பிரேமலதா விஜயகாந்த் பேசி னார். “மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பதவி யையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் பிடியி லிருந்து தமிழகம் விரைவில் மீண்டு எழுச்சிப் பாதைக்குச் செல்லும். தேமுதிக தலைமையில் மக்களாட்சி மலரும்,” என்று அவர் கூறினார். ‘நீட்’ தேர்வு பற்றி பேசிய பிரேமலதா, “மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.